search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ தளபதி"

    • கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார்.
    • ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்.

    ஒட்டவா:

    கனடாவின் ராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்.

    2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனடா படைகளை வழிநடத்திய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை, 'நேட்டோ மிஷன் ஈராக்'கை வழிநடத்தினார்.

    • பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணி திரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
    • சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

    சுக்ரே:

    தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபராக லூயிஸ் ஆர்ஸ் உள்ளார். இந்த நிலையில் அங்கு ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா திடீரென்று ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது உத்தரவின்பேரில் ராணுவத்தின் சில பிரிவினர் ராணுவ புரட்சிக்கு முயன்றனர்.

    அதிபர் மாளிகை, பாராளுமன்றம் அமைந்துள்ள பிளாசா முரில்லோ வரலாற்று சதுக்கத்தில் ராணுவ வீரர்கள், டாங்கிகள் குவிக்கப்பட்டன. இதில் ஒரு டாங்கி மூலம் அதிபர் மாளிகையின் கதவை உடைக்க முயன்றனர். அதேபோல் அரசு கட்டிடங்களும் முற்றுகையிடப்பட்டன.இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

    இதுதொடர்பாக ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கூறும்போது, ஜனநாயகத்தை ஆயுதப் படைகள் மறுசீரமைக்க விரும்புகின்றன. அதை உண்மையான ஜனநாயகமாக மாற்ற விரும்புகின்றன. நாங்கள் எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கப் போகிறோம். அதிபர் லூயிஸ் ஆர்சை மதிக்கிறேன்.

    அதேவேளையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும். சிறையில் உள்ள முன்னாள் தலைவர் ஜீனைன் அனெஸ் உட்பட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றார். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ வீரர்கள் பின்வாங்கினர். ராணுவ டாங்கிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அதன்பின் சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிபர் லூயிஸ் ஆர்ஸ் கூறும்போது, பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணிதிரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை, பொலிவியர்களின் உயிரைப் பறிக்கும் சதி முயற்சிகளை நாம் அனுமதிக்க முடியாது.

    ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒரு தேசிய அணி திரட்டலுக்கு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றார். ராணுவ தளபதி ஜூனிகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    பொலிவியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில்,சிலி, ஈக்வடார், பெரு, மெக்சிகோ, கொலம்பியா,வெனிசுலா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

    ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஜெனரல் பாண்டே 25 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு மே 31 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

    இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மே 26ம் தேதி அன்று அமைச்சரவையின் நியமனக் குழு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பணியை ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

    அவரது ஓய்வு வயதைத் தாண்டி (மே 31), அதாவது ஜூன் 30 வரை, இராணுவ விதிகள் 1954 இன் 16 ஏ (4) விதியின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜெனரல் பாண்டேவுக்குப் பிறகு இரண்டு உயர் அதிகாரிகளும் பதவி உயர்வு பெற வேண்டிய நிலையில், ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாதம் நீட்டிப்பு கிடைத்துள்ளது.

    ஜெனரல் பாண்டே கடந்த டிசம்பர் 1982- ல் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸில் (தி பாம்பே சப்பர்ஸ்) நியமிக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது ராணுவ பணியில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் சீனாவுக்கு எதிராகப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் கிழக்கு ராணுவக் கட்டளைத் தளபதியாக அவர் பணியாற்றினார்.

    அவர் ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

    • ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
    • இவரது பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்து வருபவர் மனோஜ் பாண்டே. இவர், 2022 ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.

    • எதையும் சமாளிக்கும் வகையில் இந்திய படைகள் தயாராக உள்ளன.
    • குளிர்காலம் தொடங்கியவுடன் சில படைப்பிரிவுகள் திரும்ப வாய்ப்பு

    லடாக் எல்லை பகுதியில் கடந்த 30 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள இந்தியா-சீன படைகளின் நிலை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளதாவது:

    கிழக்கு லடாக்கில் நிலைமை நிலையானது என்றாலும் கணிக்க முடியாத வகையில் உள்ளது. டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்த இரு நாடுகள் இடையேயான அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

    உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன துருப்புக்களின் பலத்தில் எந்தக் குறைவும் இல்லை. எனினும் குளிர்காலம் தொடங்கியவுடன் சில படைப்பிரிவுகள் திரும்புவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சீனாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தடையின்றி நடந்து வருகிறது.

    அவர்கள் (சீன ராணுவத்தினர்) ஹெலிபேடுகள், விமானநிலையங்கள் மற்றும் சாலைகளை அமைத்து வருகின்றனர். எங்களை பொருத்தவரை, எத்தகைய செயல்களையும் சமாளிக்கும் வகையில் போதுமான படைகள் மற்றும் போதுமான இருப்புக்கள் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

    எங்களின் நலன்கள் மற்றும் உணர் திறன் இரண்டையும் பாதுகாக்கும் வகையில், சீன ராணுவம் மீதான நமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக அளவீடு செய்யப்படுகின்றன. அனைத்து வகையான தற்செயல்களையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாகவும், இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். #BipinRawat
    புதுடெல்லி:

    ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை நெடுகிலும் நாங்கள் அமைதியை பராமரித்து வருகிறோம். நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன. இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை.

    ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவு குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல.

    ராணுவம், சட்டத்தை விட மேலானது அல்ல என்றாலும், ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம். ராணுவம் பழமைவாதமானது, ஒரு குடும்பம் போன்றது. எனவே இதில் மேற்படி செயல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
    காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமான பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் கடும் எச்சரிக்கை விடுத்தார். #ArmyChief #BipinRawat
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது ராணுவம் வழக்கும் பதிவு செய்யும்.

    அதேபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொள்ளவேண்டும். 1971-ம் ஆண்டு நம்மிடம் போரில் தோற்றதன் காரணமாக நமது அண்டை நாடு தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது.


    சட்ட ரீதியாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் அது எந்த மாதிரியான நடவடிக்கையாக அமையும் என்பது பற்றி ராணுவ தளபதி நேரடியாக குறிப்பிடவில்லை.

    எனினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து நடத்திய துல்லிய தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கையாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ArmyChief #BipinRawat

    ரஷியாவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக, அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றி வருவதாக ராணுவ தளபதி கூறினார். #BipinRawat #IndianArmyChief
    புதுடெல்லி:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. அதையும் மீறி, இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது.

    இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத், தனது 6 நாட்கள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார். நேற்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ரஷிய பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.



    ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதாவது:-

    இந்திய ராணுவத்துடன் நல்லுறவு வைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது. ஏனென்றால், நமது ராணுவம் வலிமையானது, நமக்கு எது சரியானது என்பதை அறிந்து, அதற்காக உறுதியாக நிற்போம் என்பதை ரஷியா உணர்ந்துள்ளது.

    இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவது பற்றி ரஷிய கடற்படை அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், “எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படக்கூடும் என்பதை அறிவோம். இருப்பினும், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம்” என்று கூறினேன்.

    அமெரிக்காவிடம் இருந்து சில தொழில்நுட்பங்களை பெறுவதற்காக அந்நாட்டுடன் நாங்கள் தொடர்பு வைத்திருந்தாலும், அதுகுறித்து ரஷியா கவலைப்பட வேண்டாம், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம் என்றும் அவர்களிடம் கூறினேன். எங்கள் நாட்டுக்கு எது நல்லதோ, அதை செய்வோம் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

    ரஷியாவிடம் இருந்து காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இதர ஆயுத தளவாடங்களை வாங்குவதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பங்களையும் பெற விரும்புகிறோம்.

    இவ்வாறு ராணுவ தளபதி பேசினார்.

    இதற்கிடையே, இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தளபதி நம்பியார், மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமானம் மிகவும் திறன் வாய்ந்தது. நான் 2 வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது, அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த விமானம், விமானப்படைக்கு திருப்புமுனையாக அமையும். இந்த பகுதிக்கு ரபேல் விமானம் வந்தால், அது நல்ல பாதுகாப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்திக் கொண்டால் நீரஜ் சோப்ரா போல நாங்கள் இருக்கிறோம் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். #NeerajChopra #BibinRawat
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும், பாகிஸ்தான் வீரர் வெண்கலப்பதக்கமும் வென்றனர். பதக்க மேடையில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் பதக்கம் வென்ற ராணுவ வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தலைமை தளபதி பிபின் ராவத்திடம், ‘எல்லையிலும் இது போன்ற நிகழ்வு நடக்குமா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு பதிலளித்த அவர், “முதலில் அவர்கள் (பாகிஸ்தான்) முன்வரட்டும், பயங்கரவாதத்தை நிறுத்தட்டும். அதன் பின்னர் நாங்களும் நீரஜ் சோப்ரா போல நடந்து கொள்கிறோம்” என கூறினார்.
    ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியான்மர் ராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளது. #Myanmar #Facebook #AccountBlock
    யாங்கோன்:

    மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போலீசார் மீது ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு உள்ள அந்த இனத்தினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

    ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 7 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காள தேசத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

    இந்த கலவரத்தை தடுக்க தவறியதாக அந்த நாட்டின் தலைவர் சூ கி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தளபதி, தனிநபர்கள், அமைப்புகள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தனர். ரோஹிங்யா இனத்தையே அழிக்கும் வேலையில் ராணுவம் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது. இதற்கு ‘பேஸ்புக்’ ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த நிலையில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியான்மர் ராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளது. இதேபோன்று 19 தனிநபர்கள், அமைப்புகளின் கணக்குகளும் முடக்கப்பட்டன. #Myanmar #Facebook #AccountBlock
    ×